இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு : தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து

இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு : தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து
x
இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். இதையடுத்து நாடு முழுவதும் இலங்கை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொழும்பில் மீண்டும் தாக்குதல் நடத்த கூடும் என்று இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பீதி நீடிப்பதால், தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து ரமலான் உள்ளிட்ட பண்டிகைகளை எளிமையாக கொண்டாட உள்ளதாக இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்