வெனிசுலா அதிபருக்கு எதிராக தொடரும் போராட்டம்

வெனிசுலா காரகாஸில் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் கய்டோவுக்கு ஆதரவான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
வெனிசுலா அதிபருக்கு எதிராக தொடரும் போராட்டம்
x
வெனிசுலா காரகாஸில் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் கய்டோவுக்கு ஆதரவான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. தலைநகரில் உள்ள விமான மற்றும் ராணுவ தளங்களை கய்டோ ஆதரவாளர்கள் தாக்கி வருகின்றனர். இதனால் தலைநகர் காரகாஸ் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. 

வெனிசுலா நாட்டில் அரசியல், பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் நிக்கோலசுக்கு எதிரான போராட்டம் நேற்று முதல் தீவிரம் அடைந்துள்ளது. எதிர்கட்சி தலைவரான ஜுவான் கய்டோவுக்கு ராணுவத்தின் ஆதரவு உள்ளதாக கூறப்படும் நிலையில், நேற்று காலை தலைநகர் காரகாஸில் உள்ள ராணுவ முகாம் முன்பு கய்டோ தொண்டர்களிடையே பேசினார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அதிபருக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். பல இடங்களில் கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரக்காரர்களை ராணுவம் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீசி கலைத்தது. மே தினமான இன்று அதிபருக்கு எதிராக வீதியில் இறங்கி போராட கய்டோ அழைப்பு விடுத்துள்ள நிலையில், தலைநகர் காரகாஸ் உள்பட வெனிசூலா நகரங்கள் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. வெனிசுலாவில் தற்போது நிகழ்ந்த வரும் நிகழ்வுகளுக்கு எதிர்கட்சிகள் தான் காரணம் என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் காரணங்களுக்கா அந்நாட்டு எதிர்கட்சி, ராணுவத்தை பயன்படுத்துவதையும் ரஷ்யா குறைகூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்