கொழும்பு : துப்பாக்கி சண்டை - 15 பேரின் சடலங்கள் மீட்பு

இலங்கையில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, கல்முனை - சாய்ந்த மருது பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
கொழும்பு : துப்பாக்கி சண்டை - 15 பேரின் சடலங்கள் மீட்பு
x
இலங்கையில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, கல்முனை - சாய்ந்த மருது பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த வீட்டில் குண்டு வெடித்ததில், 4 மனித வெடிகுண்டுகள் பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்ததாக இலங்கை அரசு  தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கல்முனை பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீவிரவாதிகளை சல்லடை போட்டு தேடும் பணி, முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதனிடையே, இலங்கையில் ஐ. எஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஏ. எப். பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்