விடுமுறையை கழிக்க வெளிநாட்டுச் சுற்றுலா - பயணம் சிறப்பாக அமைய 'பக்கா' முன்னேற்பாடுகள்

சுற்றுலாவை மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும் மாற்ற பொருளாதார திட்டமிடலும் அவசியமாக உள்ளன. குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலா என்றால், பல முன்னேற்பாடுகள் செய்து கொண்டால்தான் பயணம் சிறப்பாக இருக்கும்
விடுமுறையை கழிக்க வெளிநாட்டுச் சுற்றுலா - பயணம் சிறப்பாக அமைய பக்கா முன்னேற்பாடுகள்
x
சுற்றுலாவை மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும்   மாற்ற பொருளாதார திட்டமிடலும் அவசியமாக உள்ளன. குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலா என்றால், பல முன்னேற்பாடுகள் செய்து கொண்டால்தான் பயணம் சிறப்பாக இருக்கும். 

வெளிநாடு சுற்றுலா என முடிவெடுத்துவிட்டால், முதலில் நோக்கத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.. அந்த நோக்கத்துக்கு ஏற்ப, செல்ல விரும்பும் நாட்டின் சீசன் காலத்தை ஆராய வேண்டும். 

சுற்றுலா நாட்களில் நமக்கு கிடைத்த விடுமுறையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், செல்ல விரும்பும் நாட்டின் விடுமுறை தினங்களையும் கவனிக்க வேண்டும்.  பார்க்க விரும்பும் இடத்தின் விடுமுறை தேதிகளை அறியாமல் சென்றால் சில நேரங்களில் செலவு அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

உள்நாட்டு சுற்றுலா என்றால் ஏடிஎம் கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு நினைத்த மாத்திரத்தில் கிளம்பிவிடலாம். ஆனால் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு அப்படி செல்ல முடியாது. அங்கு இந்திய ரூபாய் செலவு செய்ய முடியாது. அதனால் வங்கியில் இருப்பு வைத்துக் கொண்டு இண்டர்நேஷனல் மணி கார்டு வாங்கிக் கொள்ள வேண்டும். சுற்றுலா  செல்லும் நாட்டிலேயே  தேவைக்கு ஏற்ப பணம் மாற்றிக் கொள்ளலாம். அந்த நாட்டு பண மதிப்பை கணக்கிட்டு நமது வங்கி இருப்பை வைத்துக் கொள்ள வேண்டும்.

பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் விமானக் கட்டணங்களில் சலுகை கிடைக்கும். நாடுகளின் சீஸனுக்கு ஏற்பவோ அல்லது சீஸன் அல்லாத நாட்களிலோ விமான கட்டத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். அதனால் விமான டிக்கெட் புக் செய்து வைத்துக்கொண்டோ அல்லது கட்டண சலுகை அறிவிப்புக்கு ஏற்பவோ திட்டமிடலாம்.

சுற்றுலா முடித்து திரும்பி வருவதற்கு  ரிட்டர்ன் டிக்கெட் எடுப்பது பாதுகாப்பானது.  சில நாடுகளில் ரிட்டர்ன் டிக்கெட்டிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால், பயணத் திட்டத்தில் மாற்றம் இல்லாமல் ஊர் திரும்ப ரிட்டர்ன் டிக்கெட் அவசியம்.  பாஸ்போர்ட், விசா போன்றவை  தொலைந்து போனாலும் ரிட்டர்ன் டிக்கெட் இருந்தால் நிலைமைகளைச் சமாளிக்கலாம்.

முடிந்தவரை சுமைகளை குறைக்க வேண்டும். அப்போதுதான் சுற்றுலா சென்ற நாட்டிலிருந்து விரும்பிய  பொருட்களை வாங்கிவர முடியும். நமக்குத் தேவையான மருந்துகள் கையிலேயே எடுத்துச் செல்ல வேண்டும்.  நமது நாட்டில் கிடைக்கும் சில மருந்துகள் வெளிநாட்டில் கிடைக்காமல் போகலாம் அல்லது அதற்கு அதிக செலவாகலாம்.

வெளிநாடு சுற்றுலாவின்போது நேரம் தவறாமையும், உடல்நலமும் மிக முக்கியம். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடம் செல்ல வேண்டும் என்றால் அதில் தவறக்கூடாது. இல்லையென்றால் கூடுதல் செலவாகும். தங்குமிடத்தில் செக் இன், செக் அவுட் நேரம் முக்கியம். செக் அவுட் செய்ய அரைமணி நேரம் தாமதம் ஆனாலும் ஒருநாள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

சுற்றுலா செல்வதற்கு முன்னர் சுற்றுலா காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அங்கு எதிர்பாரத விதமாக,  அசம்பாவித சம்பவங்களில் இழப்புகள் ஏற்படும் என்றால் காப்பீடு ஈடு செய்யும். அங்குள்ள மருத்துவமனைகளில் மருத்துவச் சேவை பெற காப்பீடு உதவும்.

வெளிநாடு  கிளம்பும்போதே அந்த நாட்டின் இந்திய தூதரக முகவரி, தொடர்பு எண் போன்றவையும் விசாரித்து வாங்கிவிட வேண்டும். நம்மை தொடர்பு கொள்வதற்கு ஏற்ப அங்கு மட்டும் பயன்படுத்தும் புதிய சிம்கார்டை வாங்கிக் கொள்ளலாம். அல்லது நமது செல்போன் எண்ணை அப்படியே பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த நட்டின் சட்டங்கள் மக்களின் உணர்வுகளை மீறும் விதமாக நமது நடவடிக்கைகள் இருக்ககூடாது. சுற்றுலா சென்ற நாட்டில் நமது உணவுகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும், சில நாடுகளில்   கிடைக்கிறது என்பதால் அந்த இடங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளலாம். 

வெளிநாட்டுச் சுற்றுலாவை நாம் மட்டுமே திட்டமிடுவதைவிட, அனுபவம் வாய்ந்த சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களுடன் இணைந்தும் செய்யலாம்.  நமது விருப்பம் மற்றும் பட்ஜெட் அடிப்படையில் பல  டூர் பிளான்களையும் அந்த நிறுவனங்கள் அளிக்கும்.  அவர்கள் மூலம் செல்லும்போது சில சுற்றுலா தலங்களில் சலுகை கிடைக்கலாம். குறிப்பாக செலவுகள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில் பக்காவாக பிளான் செய்தால் ஃபாரின் டூர் என்றென்றும் இனிக்கும் அனுபவமாக இருக்கும்.

Next Story

மேலும் செய்திகள்