கனமழையால் நிலச்சரிவு... 28 பேர் உயிரிழப்பு!

கொலம்பியா நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் நிலச்சரிவு... 28 பேர் உயிரிழப்பு!
x
கொலம்பியா நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவுகா மாகாணத்தில் உள்ள ரோஸாஸ் பகுதியில் கனமழை பெய்துள்ளது. சரிவுப் பகுதியான அங்கு, கனமழையின் காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில், பலர் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ  இடத்துக்கு சென்ற கொலம்பியா அதிபர் இவான் டிஹூ, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையும், வீடு உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்