ஈரான் நாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை : மே.2 வரை அமெரிக்கா காலக்கெடு - நெருக்கடியை சந்திக்குமா இந்தியா ?

ஈரான் நாட்டில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா விதித்த காலக்கெடு மே 2-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஈரான் நாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை : மே.2 வரை அமெரிக்கா காலக்கெடு - நெருக்கடியை சந்திக்குமா இந்தியா ?
x
ஈரான் மீதான பொருளாதாரத் தடையை  கடந்த ஆண்டில் அறிவித்த அமெரிக்கா, அந்த நாட்டில் இருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த நாடுகளும் பொருளாதார தடையை சந்திக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. கடந்த நவம்பர் மாதம் வரை விதிக்கப்பட்ட காலக்கெடு பின்னர் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் மே 2 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,அதை மேலும் நீட்டிக்க முடியாது என்று அமெரிக்க அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நிர்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், ஒருவேளை ஏற்கவில்லை என்றால் அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்