மெல்பர்ன் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து : நகரத்தை சூழ்ந்த கரும்புகை

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில், தனியார் தொழிற்சாலை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
மெல்பர்ன் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து : நகரத்தை சூழ்ந்த கரும்புகை
x
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில், தனியார் தொழிற்சாலை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்த நச்சு பொருட்கள் வெடித்து சிதறியதில், நகரம் முழுவதும் அடர்த்தியான கரும்புகை சூழ்ந்தது. இதனையடுத்து, அருகில் இருந்த தொழிற்சாலைகளில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அருகில் குடியிருக்கும் வீடுகளில் உள்ளவர்கள், வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்