"பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதா..?" - சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

மசூத் அசாரின் ஜெய்ஷ், இ, முகமது அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா வரைவு தீர்மானத்தை அனு​ப்பியுள்ளது.
பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதா..? - சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
x
மசூத் அசாரின் ஜெய்ஷ், இ, முகமது அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா வரைவு தீர்மானத்தை அனு​ப்பியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆதரவுடன் இயற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில், ஜெய்ஷ், இ, முகமது அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கவும், ஆயுதங்களை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது மற்றும் மசூத் அசார் மீது ஏற்கனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் சீனா தடுத்து நிறுத்தியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, உள்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் சீனா, மசூத் அசாரை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்