நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு : லண்டன் விரையும் இந்திய அதிகாரிகள்

தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்ய இந்திய புலனாய்வு துறை அதிகாரிகள் லண்டன் செல்கின்றனர்.
நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு : லண்டன் விரையும் இந்திய அதிகாரிகள்
x
தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்ய  இந்திய புலனாய்வு துறை அதிகாரிகள் லண்டன் செல்கின்றனர். இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நீரவ் மோடி, தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் நிலையில், சமீபத்தில் கைது செய்யப்பட்டு  காவலில் வைக்கப்பட்டுள்ளார். வரும் 29 ஆம் தேதி அவர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதால், வழக்கு விசாரணைக்காக இந்திய புலனாய்வு அதிகாரிகள் இங்கிலாந்து செல்ல உள்ளனர். அங்கு இங்கிலாந்து விசாரணை அமைப்புகளுக்கு தேவையான ஆவணங்களை அளித்து, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளை சிபிஐ அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்