யானையின் காலுக்கு அடியில் புகைப்படம்...புகைப்படக் கலைஞரின் அசாத்திய துணிச்சல்
தென் ஆப்பிரிக்காவில் வன உயிரின புகைப்படக் கலைஞர், காட்டு யானையின் காலுக்கு அருகில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வன உயிரின புகைப்படக் கலைஞர், காட்டு யானையின் காலுக்கு அருகில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. வன உயிரினங்களை புகைப்படம் எடுக்கும் ஸ்டீவ் பெய்ல்லி (Steve Baillie) என்ற இளைஞர், பலூலே என்ற வனப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானையைக் கண்டு, தரையில் படுத்துக் கொண்டார். அப்போது அருகில் வந்த காட்டு யானை ஸ்டீவை கோபத்துடனும், பயத்துடனும் பார்த்தது. பின்னர் தமது துதிக்கையால் முகர்ந்து பார்த்து விட்டு, அங்கிருந்து அகன்று சென்றது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
Next Story