வெனிசுலா முழுவதும் 20 மணி நேரம் மின் இணைப்பு துண்டிப்பு
பதிவு : மார்ச் 09, 2019, 11:40 AM
வெனிசுலாவில் நாடு முழுவதும் 20 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் நாடு முழுவதும் 20 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத‌தால், நோயாளிகள் பலரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. பேருந்து, ரயில், மெட்ரோ சேவைகளும் முற்றிலும் முடங்கின. கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டன.  2012 ஆம் ஆண்டுக்கு பின் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இருட்ட‌டிப்பு இது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பெரும் பொருளாதார சிக்கலில் வெனிசுலா சிக்கி தவிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சாலைகளை மறித்து நிறுத்தப்பட்ட லாரிகள் : உதவிப்பொருட்களை அரசே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மற்ற நாடுகளின் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வராத வண்ணம், கொலம்பியா எல்லையில் அமைந்துள்ள இணைப்பு பாலத்தில் வழியை மறிக்கும் விதமாக 3 லாரிகளை வெனிசுலா அரசு நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

75 views

பிற செய்திகள்

யானையின் காலுக்கு அடியில் புகைப்படம்...புகைப்படக் கலைஞரின் அசாத்திய துணிச்சல்

தென் ஆப்பிரிக்காவில் வன உயிரின புகைப்படக் கலைஞர், காட்டு யானையின் காலுக்கு அருகில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

1293 views

தாய்லாந்தில் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் : வாக்கு எண்ணிக்கையில் குழப்ப நிலை

தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது

47 views

இலங்கை வனப்பகுதிகளை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் : அதிபர் சிறிசேன பாராட்டு

இலங்கையின் 20 சதவீத வனப்பகுதியை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் என அதிபர் சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.

145 views

கிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது.

91 views

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி

தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.