அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது ஆஸ்கர் விருது விழா...

91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது.
அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது ஆஸ்கர் விருது விழா...
x
91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகர்கள், துணை நடிகர், நடிகைகள், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த ஆவணப் படம் : சிறந்த ஆவணப் படத்துக்கான விருது, ப்ரீ சோலோ (FREE SOLO) படத்துக்கு வழங்கப்பட்டது. இதில் நடித்த எலிசபெத் சாய் வாசர்கெலி, ஜம்மி சின், இவான் ஹேயஸ்  மற்றும் ஷாநான் டில் ஆகியோர் இந்த விருதைப் பெற்றனர்.

சிறந்த துணை நடிகை : சிறந்த துணை நடிகைக்கான விருது, "If Beale Street Could Talk." படத்தில் நடித்த ரெஜினா கிங்-குக்கு வழங்கப்பட்டது. 

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் : சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்கார பிரிவில் "VICE" படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக GREG CANNOM, KATE BISCOE மற்றும் PATRICIA DEHANEY ஆகியோர் பெற்றனர்.

சிறந்த ஆடை வடிமைப்பாளர் :சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான விருதை, BLACK PANTHER படத்துக்காக RUTE CARTER பெற்றார். 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு :சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது,  BLACK PANTHER படத்துக்காக, HANNAH BEACHLER மற்றும் அரங்க வடிவமைப்புக்காக JAY HART ஆகியோர் பெற்றனர்.

சிறந்த வெளிநாட்டு படம் : 

சிறந்த வெளிநாட்டு படமாக மெக்ஸிகோவின் ROMA படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது, ROMA படத்துக்காக ALFONSO CUARON- க்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகர் :சிறந்த துணை நடிகருக்கான விருதை, "Green Book" படத்தில் நடித்த Mahershala Ali பெற்றார். இவர் இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறுகிறார். ஏற்கனவே "Moonlight" படத்துக்காக ஆஸ்கர் விருதை அவர் பெற்றார்.

சிறந்த படத்தொகுப்பு :சிறந்த படத்தொகுப்புக்கான விருது, BOHEMIAN RHAPSODY படத்துக்காக, JOHN OTTMAN-க்கு வழங்கப்பட்டது. 

சிறந்த அனிமேஷன் படம் :சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது, SPIDER MAN : INTO THE SPIDER VERSE படத்துக்காக, BOB PERSICHETTI, PETER RAMSEY, RODNEY ROTHMAN, PHIL LORD AND CHRISTOPHER MILLER- ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படம் :சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை, BAO படத்துக்காக, DOMEE SHI மற்றும் BECKY NEIMAN -COBB ஆகியோர் பெற்றனர்.

சிறந்த ஆவண அனிமேஷன் குறும்படம் :சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருது "PERIOD END OF SENTENCE" படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை RAYKA ZEHTABCHI மற்றும் MELLISA BERTON ஆகியோர் பெற்றனர்.

சிறந்த ஒலி தொகுப்பு :

 

சிறந்த ஒலி தொகுப்புக்கான விருது BOHEMIAN RHAPSODY படத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த VISUAL EFFECTS :சிறந்த VISUAL EFFECTS-க்காக, FIRST MAN  படத்துக்காக PAUL LAMBERT, IAN HUNTER, TRISTAN MYLES, J.D.SCHWALM ஆகியோருக்கு வழங்கப்பட்டது.Next Story

மேலும் செய்திகள்