'பிரெக்ஸிட்' விவகாரம் : பாதுகாப்பு கருதி ராணி எலிசபெத்தை வெளியேற்ற முடிவு

'பிரெக்ஸிட்' விவகாரத்தில் மக்கள் புரட்சி வெடிக்கலாம் என்பதால், இங்கிலாந்து ராணியை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற அந்நாடு முடிவு செய்துள்ளது.
பிரெக்ஸிட் விவகாரம் : பாதுகாப்பு கருதி ராணி எலிசபெத்தை வெளியேற்ற முடிவு
x
'பிரெக்ஸிட்' விவகாரத்தில் மக்கள் புரட்சி வெடிக்கலாம் என்பதால், இங்கிலாந்து ராணியை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற அந்நாடு முடிவு செய்துள்ளது. 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரதமர் தெரசா மே வெளியேறினார். இதற்கு, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக மறு ஒப்பந்தம் செய்துகொள்ளும் தெரசா மேவின் முயற்சிக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு மறுத்துவிட்டது. ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால், கலவரம் மூளும் சூழல் நிலை உருவாகும் என்று அஞ்சப்படுகிறது. இதனால், ராணி எலிசபெத் உள்பட அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்க பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்