பிரேசில் நாட்டில் அணை உடைந்து வெள்ளம் - 300 பேர் காணவில்லை
பிரேசில் நாட்டில் இரும்பு தாது சுரங்கம் அருகே உள்ள அணை உடைந்ததில், 300 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது.
பிரேசில் நாட்டில் இரும்பு தாது சுரங்கம் அருகே உள்ள அணை உடைந்ததில், 300 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. பெலோ ஹாரிசன்டே நகரில் உள்ள பழமையான அணை உடைந்ததில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சேற்றில் புதைந்தவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அணை உடைப்பால் ஏற்பட்ட சேதங்களை, பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூ நேரில் பார்வையிட்டார்.
Next Story