வெனிசூலா அதிபருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுராவிற்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
வெனிசூலா அதிபருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
x
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெனிசூலா அதிபராக நிகோலஸ் மதுரோ அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கடந்த 10-ஆம் தேதி 2-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. கராகஸ்சில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியின் போது திடீரென வன்முறை வெடித்தது. போலீசாரின்  தடுப்புக்களை தாண்டி போராட்டக்காரர்கள் செல்ல முயன்ற போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலவரத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா உடனான உறவை துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ள அதிபர் நிகோலஸ் மதுரா 72 மணிநேரத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளளார். இதனிடையே, வெனிசூலாவின் இடைக்கால அதிபராக (Juan Guaido )ஜூவன் காடியோ பதவியேற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்