அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு இந்துப் பெண் போட்டியிடுவது உறுதி ? :வேட்பாளர் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரீஸ் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த துளசி கபார்டு ஆகிய இருவரில் ஒருவர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு இந்துப்பெண் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு இந்துப் பெண் போட்டியிடுவது உறுதி ? :வேட்பாளர் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ்
x
அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது. 

இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ், இந்து மதத்தை சேர்ந்த துளசி கபார்டு ஆகிய இருவரும் வேட்பாளர் போட்டியில் உள்ளதாக அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் முதல்முறை செனட் சபை உறுப்பினராகியுள்ள கமலா ஹாரீஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 
அவரின் மூதாதையர்கள் தமிழர்கள் ஆவர். 

மற்றொருவரான துளசி கபார்டு, இந்திய வம்சாவளியை சேராதவர் என்றாலும் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆகும். இவர்கள் இருவரில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஒரு இந்து பெண் ஜனாதிபதி தேர்தலில் நிற்பது உறுதியாகி உள்ளது.    

Next Story

மேலும் செய்திகள்