சீனா : பணம் கொடுத்து கோபம் தீரும் வரை எதை வேண்டுமானாலும் உடைக்கலாம்

சீனாவின் தலைநகரான பீஜீங்கில், பணம் கொடுத்து கோபம் தீரும் வரை பொருட்களை உடைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சீனா : பணம் கொடுத்து கோபம் தீரும் வரை எதை வேண்டுமானாலும் உடைக்கலாம்
x
சீனாவின் தலைநகரான பீஜீங்கில், பணம் கொடுத்து கோபம் தீரும் வரை பொருட்களை உடைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பழைய கடைகளில் இருந்து இதற்கென டிவி, கடிகாரம், தொலைபேசி என பல்வேறு பொருட்கள் வாங்கப்படுகின்றன. இங்கு 30 நிமிடங்களுக்கு பொருட்களை உடைக்க இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் திருமணமான பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் கல்யாண புகைப்படங்கள் மற்றும் பொருட்களை கொண்டுவந்து உடைத்து துவம்சம் செய்கின்றனர். இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளார்களில் பெரும்பாலானோர்  20 முதல் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்