"மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில்" - ஐ.நா அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில் - ஐ.நா அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு
x
மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தென் கொரிய தலைநகரான சீயோலை மனித உரிமைகள் ஆணையம் சார்பாக ஆய்வு மேற்கொள்ள சென்ற தாமஸ் குயின்டானா என்ற ஐநா அதிகாரி இதனை தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வருகின்ற மார்ச் மாதம் சர்வதேச மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக சர்வதேச நாடுகளில் நடைபெறும் மனித உரிமைகள் அத்துமீறல்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  வட கொரியாவில் பல்வேறு அரசியல் காரணத்திற்காக மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை என்று ஐநா அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்