வடக்கு சிரியா : அகதிகள் முகாமை சூழ்ந்த வெள்ளம்

வடக்கு சிரியாவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம், அகதிகள் முகாம்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சிரியா : அகதிகள் முகாமை சூழ்ந்த வெள்ளம்
x
தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. வேதனை யாதெனில் இந்த மக்களுக்கு இன்னும் அடிப்படை நிவாரண உதவிகள் கூட கிடைக்கபெறவில்லை. சிரியாவின் உள்நாட்டு யுத்தம் லட்சக்கணக்கான மக்களை கொன்றுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்களை கட்டாயப்படுத்தி அகதிகளாக மாற்றியுள்ளது. இந்நிலையில் சோதனைக்கு மேல் சோதனையாக இயற்கையும் இம்மக்களை வாட்டி வதைக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்