உலகின் நீளமான தலைமுடி : கின்னஸ் சாதனை செய்த குஜராத் பெண்

உலகிலேயே நீளமான தலைமுடி வளர்த்து குஜராத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் நிலான்ஷி படேல் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
உலகின் நீளமான தலைமுடி : கின்னஸ் சாதனை செய்த குஜராத் பெண்
x
தற்போது பிளஸ்-1 படித்து வரும் இவர், சிறுவயதில் இருந்தே  தனது தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் ஆர்வமுடன் இருந்துள்ளார். தலைமுடியை  நீளமாக வளர்ப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும், இதற்கு தனது பெற்றோரும் , சகோதரரும் உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.  தற்போது 170 செண்டி மீட்டர் நீளமாக இவரது தலைமுடி  வளர்ந்து இருப்பதால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதுடன், அதற்கான சான்றி​ழையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் என்ற பெண் 152 புள்ளி 5 சென்டி மீட்டர்  தலைமுடி வளர்த்து சாதனை செய்ததும், அதன்பின்னர் கெயிட்டோ என்ற பெண் 155 புள்ளி 5 சென்டி மீட்டர் தலைமுடி  வளர்த்ததுமே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த  2 சாதனைகளையும் நிலான்ஷி படேல் முறியடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்