காணாமல் போனாரா துபாய் இளவரசி : புகைப்படங்களை வெளியிட்டு நிரூபணம்

காணாமல் போனதாக கருதப்பட்ட துபாய் இளவரசி ஷேக் லதீஃபாவின் புகைப்படங்களை ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிட்டுள்ளது.
காணாமல் போனாரா துபாய் இளவரசி : புகைப்படங்களை வெளியிட்டு நிரூபணம்
x
32 வயதான இளவரசி லதிஃபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியதாக தகவல் வெளியானது.  பிரான்சை சேர்ந்த ஒருவருடன் படகில் தப்பிய போது, இந்திய கடல்பகுதியில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் துபாய் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதனை மறுத்து வந்த ஐக்கிய அரபு அமீரகம், லதிஃபா துபாயில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதாக கூறி அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அவை, கடந்த 15-ஆம் தேதி இளவரசி லதிஃபாவை, சர்வதேச மனித உரிமைகள் ஆணைய முன்னாள் ஆணையர் மேரி ரான்பின்சன் சந்தித்த போது எடுக்கப்பட்டதாகவும் அமீரக அரசு விளக்கமளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்