முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
x
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு
7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில் லண்டனில், சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியமுக்கு  7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பனாமாகேட் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த  பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு  7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் செரீப், 3 முறை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்