ஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை - போப் பிரான்சிஸ் திட்டவட்டம்

ஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு, கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை என, போப் பிரான்சிஸ் திட்டவட்டமாக தெரிவித்தள்ளார்.
ஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை - போப் பிரான்சிஸ் திட்டவட்டம்
x
ஸ்பெயின் நாட்டில், மதச் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளதாக, இத்தாலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பேட்டியில், ஓரின சேர்க்கை  தற்போது நவநாகரீகங்களுள் ஒன்றாகி விட்டதாக கூறிய அவர், பிரம்மச்சரியத்தின் மீதான உறுதிமொழியை கடைப்பிடிக்க மதகுருக்களை வலியுறுத்தியுள்ளார். மதகுருக்களை தேர்ந்தேடுக்கும் தேவாலயங்கள் சரியான நபர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரத்தை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஓரினசேர்க்கை உணர்வு, வேறூன்றிய நபர்களை திருச்சபை பணிகளுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும், இந்த கட்டுப்பாடுகள் கன்னியாஸ்திரியாக விரும்பும் பெண்களுக்கும் பொருந்தும் என்றும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்