பிரான்சில் கார்பன் வரிவிதிப்பை கண்டித்து கலவரம் : 110 பேர் படுகாயம்

கார்பன் வரி விதிப்புக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரிசீல் நடந்த கலவரத்தை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படும் நிலை எழுந்துள்ளது.
பிரான்சில் கார்பன் வரிவிதிப்பை கண்டித்து கலவரம் : 110 பேர் படுகாயம்
x
கனடா, பெல்ஜியத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கார்பன் வரி விதிப்பு கொள்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. தலைநகர் பாரீசில் 190-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. 6 கட்டடங்கள் தீக்கிரையாகி உள்ள நிலையில் 110 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படையினருக்கும், அரசுக்கு எதிரான போராட்ட அமைப்பான மஞ்சள் ஆடை அமைப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 17 பாதுகாப்பு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பிரான்ஸ் முழுவதும் எரிபொருள் மீதான வரிவிதிப்பு கொள்கையை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் 75 ஆயிரம் பேர் பங்கேற்று உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை கலவரம் தொடர்பாக 270 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், பிரான்சி​ல் அவசர நிலை பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக தன்னை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரனுக்கு, தற்போது கார்பன் வரிவிதிப்பே தலைவலியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்