இலங்கையில் பழைய காலம் மீண்டும் வரும் : யாழ் மாவட்ட ராணுவ தளபதி எச்சரிக்கை

இலங்கையில் வீதியில் செல்லும் தமிழர்களை வழிமறித்து சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும் என யாழ் மாவட்ட ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் பழைய காலம் மீண்டும் வரும் : யாழ் மாவட்ட ராணுவ தளபதி  எச்சரிக்கை
x
இலங்கை வட்டுக்கோட்டை பகுதியில் ராணுவத்தினரால் சீரமைக்கப்பட்ட  குளத்தைபொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய யாழ் மாவட்ட  ராணுவ தளபதி தர்ஷன் ஹெட்டியாராச்சி , சிங்கள மக்கள்,  தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புவதாக கூறினார். இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது  துன்பப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வினை இன்பமயமாக மாற்றுவது ராணுவத்தினரின் கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.தமிழ் மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்று கேட்டு கொண்ட அவர், இச்சூழல் மாறினால்  வீதியில் செல்லும் தமிழர்களை வழிமறித்து காவல்துறையினரும், ராணுவத்தினரும் சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும் என்று அவர் எச்சரித்தார்

Next Story

மேலும் செய்திகள்