இலங்கை அரசு வசம் இருந்த தமிழக மீனவரின் படகை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு...

இலங்கை அரசு வசம் இருந்த தமிழக மீனவரின் நாட்டு படகை விடுவிக்குமாறு , அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அரசு வசம் இருந்த தமிழக மீனவரின் படகை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு...
x
கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ந் தேதி கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகை, அத்து மீறியதாக கூறி, இலங்கை கடற்படையினர்,  வழக்கு பதிவு செய்து படகை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் படகை, விடுவிப்பது குறித்த வழக்கு, ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஆவணங்களை தாக்கல் செய்தார். இதனையடுத்து, இலங்கை கடல் எல்லைக்குள் படகு வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து, படகை விடுவிக்க உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட படகு ஓரிரு நாளில் 
தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்