பாலியல் தொழிலில் பயன்படுத்தப்பட்ட குரங்கு : இந்தோனேஷியாவில் நடைபெற்ற அவலத்தின் பின்னணி

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த போதும், அந்த வலியின் வேதனையில் இருந்து மீண்டு வராத ''இவள்'', உலகளவில் பரபரப்பாக பேசப்பட்ட சூழலை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
பாலியல் தொழிலில் பயன்படுத்தப்பட்ட குரங்கு : இந்தோனேஷியாவில் நடைபெற்ற அவலத்தின் பின்னணி
x
கடந்த 2013ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தாலும் அந்த வலியின் வடுக்களை இன்னமும் மறக்க முடியாமல் தவிக்கும் ''இவள்...''  யார் தெரியுமா...?
மனிதர்களால் சீரழிக்கப்பட்ட இவள் ஒரு உரங்கட்டான் குரங்கு. அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த அபூர்வ உயிரினம் மனிதரைக் கண்டாலே, ஓடி விடுகிறது.

இந்தோனேசியாவின், போர்னியா காட்டில் இருந்து துரத்தி விடப்பட்ட உராங்குட்டான் குரங்கு ஒன்று, தன் குட்டியுடன் அருகில் இருந்த கரேங் பாங்கி (Kareng Pangi) என்ற கிராமத்திற்குள் புகுந்தது. அங்கு, பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணின் கைகளில் சிக்கியது. அந்தப் பெண் உரங்குட்டானிடம் இருந்து குட்டியை திருடினார். 

உராங்குட்டான் குட்டியின் ரோமங்களை சவரம் செய்து பாலியல் தொழிலில் அதனை ஈடுபடுத்த, அந்த பெண் முடிவு செய்தார். உராங்குட்டான் குட்டியின் மீது வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டன. சிலர் உராங்குட்டான் குட்டியுடன் பாலியல் உறவு கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டனர். அந்தப் பெண், குட்டியை அடித்துத் துன்புறுத்தி, வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தார்.

கிராம மக்களுக்கு இந்த விவகாரம் தெரிய வர, அந்தப் பெண்ணின் மீது வனத்துறையில் புகார் கொடுத்தனர். 35 ஆயுதமேந்திய காவல்துறையினர், அந்தப் பெண்ணின் வீட்டைச் சுற்றி வளைத்து, உராங்குட்டான் குட்டியை மீட்டனர். அந்தப் பெண் மீது, சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

போர்னியோ உராங்குட்டான் சர்வைவல் பவுண்டேசன் (Borneo Orangutan Survival Foundation) என்ற அமைப்பு, மீட்கப்பட்ட அந்த உராங்குட்டானை தத்தெடுத்தது. இந்தச் சம்பவம் நடந்து, பல ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த குரங்கிற்கு, Pony என்று பெயரிட்டுள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக, போனியின் பயத்தைப் போக்கியுள்ளனர். 

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் செய்தியை அன்றாடம் கடக்கிறோம். ஒரு சில மனிதர்கள், ஒரு படி மேலே போய், விலங்குகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். 
கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் தான், அழிவின் விளிம்பில் உள்ள அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் என்று, விலங்கின ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்... 

Next Story

மேலும் செய்திகள்