"வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லை" - அமெரிக்க சட்ட திருத்தத்தை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவு

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்நாட்டு குடியுரிமை வழங்கும் முறையை ரத்து செய்யப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லை - அமெரிக்க சட்ட திருத்தத்தை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவு
x
அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும், அமெரிக்க குடியுரிமை வழங்க வேண்டும் என அந்நாட்டின் 14-வது அரசியல் சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க குடியுரிமை இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டினருக்கு குழந்தை பிறந்தால், குழந்தைக்கு குடியுரிமை கிடைக்கும். அதை பயன்படுத்தி, குழந்தையின் பெற்றோர், எளிதில் குடியுரிமை பெற்று விடுவார்கள். 
கடந்த 85 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த திட்டத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், உலகிலேயே அமெரிக்காவில் மட்டும் தான், இதுபோன்ற அபத்தமான நடைமுறை அமலில் இருப்பதாக தெரிவித்தார். இந்த திட்டத்தை ரத்து செய்வது குறித்து, வெள்ளை மாளிகை வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்