இந்தியாவில் சீன செல்போன்களுக்கு மவுசு...

இந்தியாவில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சீன நிறுவன செல்போன்கள் விற்பனையாகிறது.
இந்தியாவில் சீன செல்போன்களுக்கு மவுசு...
x
* உலகின் மிகப்பெரிய செல்போன் சந்தையான இந்தியாவில் சுமார் 77 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

* 2017-18 நிதியாண்டில் இந்தியர்கள் மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சீன நிறுவன செல்போன்களை வாங்கியுள்ளனர். இதற்கும் முந்தைய நிதியாண்டை விட இது ஏறக்குறைய இரு மடங்கு அதிகம் ஆகும்.

* ஜியோமி நிறுவனம் 22 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கும், ஒப்பொ நிறுவனம் 11 ஆயிரத்து 900 கோடிக்கும், 


* விவோ நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், ஹூவாய் நிறுவனம் 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கும் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளன. 
 
* சீன நிறுவனங்கள், இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைத்து
செல்போன்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாகும் இந்த தொழிற்சாலைகள் மூலம் பல லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

* இந்தியாவில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஜியோமி நிறுவனம் தொழிற்சாலை துவங்கப் போவதாக அறிவித்துள்ளது.

*இதேபோல், உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு தொழிற்சாலைகளை ஒப்போ நிறுவனம் உருவாக்கி வருகிறது. விவோ நிறுவன தொழிற்சாலை 5 ஆயிரம்  தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்