ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி : உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார்.
ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி : உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
x
இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இன்று காலை  யமானாஷி நகரில் உள்ள மவுண்ட் ஃப்யூஜி ஹோட்டலில்  பிரதமர் மோடியை, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே வரவேற்றார். அப்போது, இரு தலைவர்களும் ஹோட்டல் அருகே உள்ள தோட்டத்தில் நடந்து சென்றபடி சிறிது நேரம் கலந்துரையாடினர்.

Next Story

மேலும் செய்திகள்