யார் இந்த மைக் டைசன்...??

மைக் டைசன்.. குத்துச்சண்டை களத்தின் இரும்பு மனிதன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.. குத்துச்சண்டை விளையாட்டை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றவர்.
யார் இந்த மைக் டைசன்...??
x
1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி மைக் டைசன்.. 
பிறந்தார். டைசன் 10 வயது இருக்கும் போது, அவரது தந்தை குடும்பத்தை விட்டுவிட்டு ஓடி விட்டார்.  அடுத்த 6 ஆண்டுகளில் டைசனின் தாயும் இறந்தார். 

தாய், தந்தை அரவணைப்பு இல்லாமல், டைசன் ஒரு அடாவடி குழந்தையாகவே வளர்ந்தார். தெருச் சண்டை, திருட்டு என தனது குழந்தை பருவத்தில் 38 முறை சிறை சென்றுள்ளார் டைசன். 

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்த டைசனின் சண்டை திறமையை அடையாளம் கண்ட பயிற்சியாளர் BOBBY STEWART அவருக்கு பயிற்சி அளித்து தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாற்ற, CONSTATINE AMATO விடம் டைசனை அறிமுகப்படுத்தினார்.

அந்த சந்திப்பு, டைசனின் வாழ்க்கையே மாற்றியது. தெருக்களில் சண்டை போட்ட டைசன், அதன் பின் குத்துச்சண்டை களத்தில் சண்டையிட்டார்.

அதிரடி, ஆக்கோரஷத்தை மட்டுமே தனது ஆயுதமாக பயன்படுத்திய டைசன், குத்துச்சண்டை விளையாட்டில் மாபெரும் சக்தியாக விளங்கினார். 

முதல் 19 போட்டிகளில் எதிராளியை நாக் அவுட் செய்து வென்றார் மைக் டைசன், இதில் 12 போட்டிகளில் முதல் சுற்றிலே வென்றார் டைசன்..

தனது 20 வது வயதில் HEAVY WEIGHT பட்டத்தை வென்ற மைக் டைசன், சிறுவயதிலேயே அந்த பட்டத்தை வென்றவர் என்ற உலக சாதனையை படைத்தார். 

தொடர்ந்து 10 முறை, HEAVY WEIGHT பட்டத்தை வென்ற டைசன், தனது 38வது போட்டியில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தார். 

1991வது ஆண்டு மைக் டைசன், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கினார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த வழக்கில் மைக் டைசன், சிறை சென்றார். 

மூன்றரை ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிற்கு மீண்டும் குத்துச்சண்டை களத்திற்கு திரும்பிய டைசன், HEAVYWEIGHT பட்டத்தை வென்றார்.  2006 ஆம் ஆண்டு டைசன் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
58 போட்டிகளில் களமிறங்கி 50 போட்டிகளில் டைசன் வென்றுள்ளார். ஓய்வுக்கு பிறகு டைசன் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மைக் டைசனின் பலவீனமே கோவம், ஆக்கோரஷம் மட்டும் தான், ஆனால், அதையே அவர் பலமாக மாற்றி , சிறந்த குத்துச்சண்டை வீரராக திகழ்ந்தார். 

Next Story

மேலும் செய்திகள்