தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய YouTube தளம் : மீண்டும் இயங்கத் தொடங்கியது

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் முடங்கியிருந்த youtube வலைதளம், மீண்டும் இயங்கத் தொடங்கியது.
தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய YouTube தளம் : மீண்டும் இயங்கத் தொடங்கியது
x
வீடியோக்களை, உடனுக்குடன் பார்க்க உதவும் youtube தளம் இன்று அதிகாலை முதல் இயங்கவில்லை. தளத்தின் முகப்பு பக்கம் வேலை செய்தாலும், அதில் வீடியோக்கள் எதையும் பார்க்க முடியவில்லை என பயனாளர்கள் பலர், பல்வேறு சமூகவலைதளப் பக்கங்களில்  புகார் தெரிவித்தனர். 



server-ல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, யூடியூப் இயங்குவதில் பிரச்சினை ஏற்பட்டதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்தது. சில மணி நேரங்களுக்குப் பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, Youtube தளம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்