பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டுகள் சபைக்கும் இளைஞர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது - போப் பிரான்சிஸ்

கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், சபைக்கும் இளைஞர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டுகள் சபைக்கும் இளைஞர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது - போப் பிரான்சிஸ்
x
நான்கு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற போப் பிரான்சிஸ்,எஸ்டோனியாவில் உரையாற்றினார்.அப்போது, திருச்சபைகள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவதாகவும், பென்சில்வேனியாவில், 300 பாதிரியார்களால் ஆயிரம் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான அறிக்கையையும் சுட்டிக் காட்டினார். மேலும், திருச்சபைகளை கண்காணிப்பது என்பது கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தால் முடியாத காரியம் என்றும், அதற்கு அரசுகளும் உதவி செய்ய வேண்டும் எனவும் போப் பிரான்ஸிஸ் தெரிவித்தார்.

தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளால், திருச்சபை மீது இளைஞர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற திருச்சபையினர் தங்களது வழிகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தினார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பலாத்காரம் செய்ததாக, முன்னாள் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போப் பிரான்சிஸ் இதுபோன்று தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்