வானில் 13 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய "ஸ்கை டைவர்"

இந்தியாவைச் சேர்ந்த ஸ்கை டைவிங் குழு, அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு மேலே வானில் பறந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது.
வானில் 13 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஸ்கை டைவர்
x
பிரதமர் நரேந்திர மோடியின் 68வது பிறந்த தினம் நேற்று, கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த  ஸ்கை டைவிங் குழு, அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு மேலே வானில் பறந்து, மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது. இதில் பங்கேற்ற "ஸ்கை டைவர்" சீதல் மகாஜன், சிறிய ரக விமானத்தில் இருந்து, 13 ஆயிரம் அடி உயரத்தில் குதித்தார். அப்போது, மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கையில் பதாகையை ஏந்தியபடி அவர் இருந்தார். 

Next Story

மேலும் செய்திகள்