எம்.ஜி.ஆர். இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவுடனான முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் - இலங்கை கல்வி அமைச்சர்

இலங்கை அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நீடிக்கும் சில முரண்பாடுகளுக்கு எப்போதோ தீர்வு காணப்பட்டிருக்கும் என கூறினார்.
எம்.ஜி.ஆர். இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவுடனான முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் - இலங்கை கல்வி அமைச்சர்
x
எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்தநாள் விழா, இலங்கையின் கண்டி நகரில் கொண்டாடப்பட்டது. இலங்கை கல்வி அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இலங்கை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, கண்டி மாவட்ட எம்.பி. வேலுகுமார் மற்றும் தமிழ்​ திரையுலக பிரபலங்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ரமேஷ் கண்ணா, இசையமைப்பாளர் தேவா, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எம்.ஜி.ஆர் விருதுகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். குறித்து சிறப்பு பட்டிமன்றம், ஆவணப் படம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இந்த விழாவில் பேசிய இலங்கை அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர், உயிரோடு இருந்திருந்தால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நீடிக்கும் சில முரண்பாடுகளுக்கு எப்போதோ தீர்வு காணப்பட்டிருக்கும் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்