நேபாளம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.
நேபாளம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
x
* இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட 'பிம்ஸ்டெக்' கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 

* இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேபாளம் சென்றார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

* இதைத் தொடர்ந்து நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியை பிரதமர்  மோடி சந்தித்தார். இதுபோல, பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களும் கூட்டாக சந்தித்துக் கொண்டனர். இதையடுத்து, இலங்கை மற்றும் வங்கதேச தலைவர்களை பிரதமர் மோடி இன்று மாலை தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்