குறைவாக மது அருந்தினாலும் பாதகம் -மருத்துவ ஆய்வு தகவல்
பதிவு : ஆகஸ்ட் 27, 2018, 06:21 PM
குறைவாக மது அருந்தினாலும் பாதகம் ஏற்படும் என மருத்துவ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தினமும் சிறிய அளவில் சிகப்பு ஒயின் அருந்துவது இதயத்திற்கு நல்லது என பரவலாக நம்பப் படுகிறது. ஆனால் சமீபத்தில் வெளியான மருத்துவ ஆய்வறிக்கையில், மிகக் குறைவாக மது அருந்தினாலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.1990 முதல் 2016 வரை, 26 ஆண்டுகளில், 195 நாடுகளில் நடத்தப்பட்ட மிக விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையை, 'தி லேன்செட்' என்ற பிரபல மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.

2016ல் 2 சதவீத பெண்களும், 7 சதவீத ஆண்களும் மது பழக்கத்தால் மரணம் அடைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.15 முதல் 49 வயது வரையிலானவர்களின் மரணங்களில்12 சதவீதம் மதுவினால் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தினமும் ஒரு பெக் மது அருந்தினால், 24 வகையான நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு, அரை சதவீதம் அதிகம் இருக்கும் எனவும் அதுவே, 2 பெக் மது அருந்தினால் 7 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ஐந்து பெக் மது அருந்தினால் 37 சதவீதம் நோய் தாக்குதல் சாத்தியம் அதிகரிக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரூ.18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுவகைகளை காப்பீடு செய்ய டா​ஸ்மாக் முடிவு

18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில் வகைகளை காப்பீடு செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

16 views

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்

திருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

256 views

தடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

சுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

785 views

பிற செய்திகள்

பிரான்சில் வெடித்து சிதறிய எரிமலை..!

பிரான்சில் உள்ள ரியூனியன் தீவில் எரிமலை வெடித்துள்ளது.

167 views

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?

துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

865 views

யாழ் நூலகத்திற்கு 50000 புத்தகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

இலங்கை யாழ் நூலகத்திற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார்.

63 views

2025ல் வேலை வாய்ப்பை பறித்துவிடும் எந்திரங்கள்...! - அதிர்ச்சி அறிக்கை

வரும் 2025ம் ஆண்டில், சுமார் 12 துறைகளின் வேலை வாய்ப்பை எந்திரங்கள் தட்டிச்சென்று விடும் என உலகப் பொருளாதார மன்றம் தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

1160 views

வட கொரியாவில் தென் கொரியா அதிபர் : ராணுவ அணிவகுப்புடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

வட கொரியாவுக்கு சென்ற தென் கொரிய அதிபருக்கு பியாங்யாங் விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

151 views

தனது பாட்டியுடன் பிறந்தநாளை கொண்டாடிய கொரில்லா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 'சான்டியாகோ உயிரியல் பூங்காவில் "ஃபிரங்" என்ற கொரில்லா தனது 10 வது பிறந்த நாளை கொண்டாடியது.

217 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.