மனிதர்கள் வாழத் தகுந்த நகரங்கள் பட்டியல் : வியன்னா முதலிடம்

மனிதர்கள் வாழத் தகுந்த நகரங்கள் பட்டியலில், உலகிலேயே வியன்னா முதலிடம் பிடித்திருக்கிறது
மனிதர்கள் வாழத் தகுந்த நகரங்கள் பட்டியல் : வியன்னா முதலிடம்
x
வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் உலகின் முதல் இடத்தை பிடித்திருக்கிறது வியன்னா.. இந்நகரம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவின் தலைநகராகும். ஐரோப்பிய யூனியனில் இந்நகரம் 7 வது பெரிய நகராக இருக்கிறது. பெர்லினுக்கு அடுத்து ஜெர்மானிய மொழி பேசப்படும் உலகின் 2 வது பெரிய நகராக இது இருக்கிறது. இந்நகரின் மக்கள் தொகை 30 லட்சம் மட்டுமே. ஆண்டுக்கு 68 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்நகரில் குவிகிறார்கள். காலநிலைக்கு ஏற்ப வெப்பம், மழை, குளிரை சரியான அளவில் பெறும் நகராக விளங்குகிறது. பனிகாலத்தில் வியன்னா பனிபோர்த்தி வெண்மை நிறமாக காட்சியளிக்கும். ஏராளமான வணிக நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்ப அமைப்புகளும் குவிந்துள்ளன. 

வியன்னா என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அங்கே நடத்தப்படும் கலைநிகழ்ச்சியான vienna balls. ஆங்காங்கே  அதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கலையரங்கத்தில், அடிக்கடி இந்த நடன நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கும். நம்மூரில் விடிய விடிய நடக்கும் தெருக்கூத்தைப் போல, vienna balls ம் விடிய விடிய நடப்பதோடு சில நேரங்களில் அடுத்த நாள் பகலும் தொடரும். இதில் நடனமாடுவதற்கென்று பிரத்யேக நடன பள்ளிகள் அந்நாட்டில் இயங்குகின்றன. இதனை கண்டுரசிக்க  கட்டணம் செலுத்த வேண்டும். கலையரங்குகளில் உணவு, சிகையலங்காரம் , மருத்துவம்  உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கென அரசும், மக்களும் தனியாக நேரம் ஒதுக்குகிறார்கள். இதனால் மகிழ்ச்சிக்கு அதி முக்கியத்துவம் தரும் நாடாக ஆஸ்திரியா விளங்குகிறது. வியன்னாவில் இருக்கும் Hundertwasser கட்டடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் விதத்தில் இருக்கிறது. இது குடும்ங்கள் வசிக்கும் அபார்ட்மன்டாகவும் , சில அலுவலகங்கள் இயங்கும் இடமாகவும் இருக்கிறது. கட்டடத்தின் மேற்பகுதி, வராண்டாக்கள், சில அறைகள் என எங்கும் மரங்களும் பூங்காக்களும் ஆக்கிரமித்திருக்கின்றன.

வியன்னாவில் இருக்கும் Tiergarten Schönbrunn என்ற மிருகக் காட்சி சாலை உலகின் மிகப்பழமையான விலங்கியல் பூங்காவாக திகழ்கிறது. 1752 ல் துவங்கப்பட்ட இந்த மிருககாட்சி சாலையில் பரவலாக உலகின் முக்கிய விலங்குகள் அனைத்தையும் காண முடியும்.

Next Story

மேலும் செய்திகள்