சீனாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள் : நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடக்கம்

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சீனாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள் : நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடக்கம்
x
சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால்  பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தென் மேற்கு மாகாணங்களான யுனான் மற்றும் சிச்சுவானில்  தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் வெள்ளம் காரணமாக பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வீட்டிற்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற மக்கள் போராடி வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்