பிரதமர் மோடியின் பயணத்தால் கவனம் ஈர்த்திருக்கும் உகாண்டா

பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்பிரிக்க நாடான உகாண்டா பற்றிய சில தகவல்கள்
பிரதமர் மோடியின் பயணத்தால்  கவனம் ஈர்த்திருக்கும் உகாண்டா
x
உகாண்டா மக்கள் தொகை 4 கோடி.ஊழலில் உலக சாதனை படைக்கும் அளவுக்கு பல்வேறு நாடுகளோடு போட்டி போடுகிறது.84 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே  தான் இருக்கிறார்கள்.பின்தங்கிய நாடாக இருப்பதால், குழந்தை தொழிலாளர்கள் அதிக  எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.வறுமை காரணமாக இளம்பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள்.இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், அந்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 54 சதவிகிதத்தினர் எயிட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகின் மிகப்பெரிய ஏரியாக பார்க்கப்படும் விக்டோரியா உகாண்டாவில் தான் இருக்கிறது. உலக  பிரபலமாக பார்க்கப்படும் பல பிரம்மாண்ட ஏரிகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.காடுகள்,  சதுப்பு நிலங்கள் எண்ணிலடங்கா வன விலங்குகள் நாட்டில் நிறைந்திருக்கிறது..  ஒட்டகச்சிவிங்கி, யானைகள், புலிகள், சிங்கங்கள் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.இந்தியா / உகாண்டா இடையே 1965 முதலே நல்லுறவு நீடிக்கிறது.உகாண்டாவின் மிகப்பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.. குறிப்பாக குஜராத்தை சேர்ந்தவர்கள் அந்நாட்டில் அதிகம் வர்த்தகம் செய்கிறார்கள்..பஞ்சாபியர்கள், கேரளத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் உகாண்டாவில் வசிக்கிறார்கள்.வெளிநாடு சென்றுபடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால்,உகாண்டா மாணவர்களின் முதல் தேர்வாக இருப்பது இந்தியா தான்.இன்றளவும் ஏராளமான உகாண்டா இளைஞர்கள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் Kintu Musoke கூட இந்தியாவில் பயின்றவர் தான்.. உகாண்டாவில் பல்கலைக்கழகங்களையும் ,  கல்வி நிறுவனங்களையும் நிறுவ இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்