கீபோர்டு வாசிக்கும் "அதிசய கோழி"...!

அமெரிக்காவில் வாழும் அதிசய கோழி,டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் கீ போர்டு வாசித்து உலகையே வியக்க வைத்தது.
கீபோர்டு வாசிக்கும் அதிசய கோழி...!
x
இந்த அதிசய கோழியின் பெயர் ஜோக்கு (Jokgu). அமெரிக்காவைச் சேர்ந்த Shannon Myer என்பவர் வளர்க்கும் இந்தக் கோழி, டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கீ போர்டு வாசித்து உலகையே வியக்க வைத்தது. அமெரிக்க சுதந்திர தினத்தன்று அந்த நாட்டின் தேச பக்தி பாடல் ஒன்றை கீ போர்டில் இசைக்க வைத்தார்கள். ஜோக்கு, அலகால் கொத்தி, இசை இசைத்தது. ஆனால், இதற்கும் விமர்சனம் எழுந்துள்ளது. ''இவர்கள், கீ போர்டில் சிவப்பு நிற விளக்கை ஒளிரச் செய்கிறார்கள், அதைத்தான் கோழி கொத்துகிறது'' என சிலர் கோக்குவை விமர்சித்தார்கள். ஆனால், அப்படி வெளிச்சத்தைக் கொத்துவது கூட கடும் பயிற்சி மூலமாகத்தான் என்கிறார் ஜோக்குவின் வளர்ப்பாளர். இதற்கு, காரணம் கோழிகள் எதையும் அதிக நேரம் கவனிக்காது. தொடர்ந்து எந்த வேலையையும் செய்யாது. ஆனால், ஜோக்கு நூறு நோட்ஸ் கொண்ட பாடலை இடைவெளி இல்லாமல் வாசித்து, சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்