கூகுள் நிறுவனத்தின் மீது 34,500 கோடி அபராதம்

ஆண்டிராய்ட் செல்போன் தயாரிக்கும் போது, அதில் கூகுள் அப்ளிகேசன் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கட்டாயபடுத்தியதாக ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் அபராதம் விதித்துள்ளது
கூகுள் நிறுவனத்தின் மீது 34,500 கோடி அபராதம்
x
ஆண்டிராய்ட் செல்போன் தயாரிக்கும் போது, அதில் கூகுள் அப்ளிகேசன் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கட்டாயபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்,ஐரோப்பிய ஒன்றியம் கூகுள் நிறுவனத்திற்கு 34 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றிலேயே ஒரு நிறுவனத்தின் மீது விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகை இது.ஆண்டிராய்ட் செல்போனை வாங்கும் போதே கூகுள் அப்ளிகேசன் அதில் இடம் பெற்றிருக்கும்.  இது மற்ற நிறுவனங்களை பாதிப்பதாகவும்,  நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டிகான வாய்ப்பை குறைப்பதாகவும் கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்  அதிகாரி சுந்தர் பிச்சை, மக்களுக்கு கூடுதல் வசதிகளை தான் கூகுள் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும், அமெரிக்க நிறுவனங்களை தான்  குறி வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்