சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாத ரூ.300 கோடி

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்து உரிமை கோராத 6 கணக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாத ரூ.300 கோடி
x
சுவிஸ் வங்கியில் உரிமை கோராமல் முடங்கிக் கிடக்கும் கணக்குகள் குறித்த விபரங்கள், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், 3 ஆயிரத்து 500 பேரின் கணக்கு விபரங்கள் இடம் பெற்றன. அதில், பல ஆண்டுகளாகவே இந்தியர்கள் 6 பேரின் கணக்குகளுக்கு இது வரை யாரும் உரிமை கோரவில்லை எனவும் இந்த கணக்குகளில் 300 கோடி ரூபாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த 6 கணக்குகளும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எனவும் அதன்பிறகும் யாரும் உரிமை கோராத பட்சத்தில் அந்த கணக்கு விபரம் நீக்கப்படும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்