பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் 6 வது இடத்தில் இந்தியா

4 ஆண்டுகளில் பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.
பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் 6 வது இடத்தில் இந்தியா
x
* 2014 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது.

* அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் இருந்து வந்தன.

* இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியில்  4 ஆண்டுகளில் 4 நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா 

* 6- வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 

* 4 ஆண்டுகளில் பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. 

* 2017ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.59 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில்,

* பிரான்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.58  டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. 

* மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இதே நிலையில் தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி செல்லும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்