தாய்லாந்து குகையில் சிக்கிய 13 பேரும் பத்திரமாக மீட்பு - மீட்பு குழுவினரின் முயற்சி வெற்றி

தாய்லாந்தில் வெள்ளநீர் புகுந்த குகையில் சிக்கி தவித்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் 18 நாள்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தாய்லாந்து குகையில் சிக்கிய 13 பேரும் பத்திரமாக மீட்பு - மீட்பு குழுவினரின் முயற்சி வெற்றி
x
தாய்லாந்தில் வெள்ளநீர் புகுந்த குகையில் சிக்கி தவித்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் 18 நாள்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, ஆழமான, தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

குகைக்குள் உள்ள உயரமான பாறைக்குள் அமர்ந்து வெளியே வரமுடியாமல் கடந்த 18 நாட்களாக அவர்கள் தவித்து வந்தனர். 

தாய்லாந்து கடற்படையை சேர்ந்த சிறப்பு மீட்புக்குழு கடந்த 2 நாட்களாக தலா 4 பேர் வீதம் மொத்தம் 8 சிறுவர்களை மீட்டது. 

உயிரை பணயம் வைத்து மீட்பு குழுவினர் மேற்கொண்ட முயற்சிக்கு முழு வெற்றி பெற்றது. செவ்வாய்கிழமை மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் 
பயிற்சியாளரும் குகைக்குள் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.  உடல் சோர்வினால் பாதிக்கப்பட்ட அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குகையில் இருந்து அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்த உறவினர்களும் குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.   

சிக்கலான குகைக்குள் சிக்கிய 13 பேர் 18 நாட்களுக்குள் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது, வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.  மீட்புக்குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்