சவுதி அரேபியாவில் இனி பெண்களும் கார் ஓட்டலாம்!

இந்த ஒரு முடிவினால் மட்டும், சவுதி அரேபியாவின் உற்பத்தி 6 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என கணிப்பு
சவுதி அரேபியாவில் இனி பெண்களும் கார் ஓட்டலாம்!
x
பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதித்திருந்த ஒரே நாடு என்ற பெயரை தற்போது மாற்றி அமைத்துள்ளது சவுதி அரேபியா. 1950களில் அமலுக்கு வந்த இந்த சட்டம் நீங்கிய தருணத்தை சவுதி பெண்கள் கார் ஓட்டியவாறே கொண்டாடி மகிழ்ந்தனர். 


2017 செப்டம்பர் 26ல் இந்த வரவாற்று சிறப்பு மிக்க முடிவை சவுதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் படி, நேற்று முதல் சவுதி பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு தயாராகும் விதமாக, சென்ற ஆண்டு முதலே நாடு முழுவதும் பெண்களுக்கான பிரத்தியேக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் தோன்றின. 


1990 முதல் அந்நாட்டு பெண்கள் நடத்திவரும் போராட்டத்திற்கான மாபெரும் வெற்றியாக கருத்தப்படும் இந்த முடிவால், சமூக மாற்றங்கள் மட்டுமின்றி, பொருளாதார மாற்றங்களும் ஏற்படும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.இந்த ஒரு முடிவினால் மட்டும், 2030ம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவின் உற்பத்தி 6 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என்கிறது ப்ளூம்பர்க் எகனாமிக்ஸ் நிறுவனம்!


இன்றைய நிலையில், சவுதி அரேபியாவில் இருக்கும் மொத்த தொழிலாளர்களில், 20% மட்டுமே பெண்கள் உள்ளனர். கார் ஓட்டும் உரிமை கிடைத்ததை அடுத்து, இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்