குளத்தின் நடுவே ரம்மியமாக காட்சியளிக்கும் மியாவாக்கி காடுகள்

x

கண்களுக்கு விருந்தளிக்கும் மியாவாக்கி காடுகளின் டிரோன் காட்சி வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் பெரியகுளம் கண்மாய் அண்மையில் பெய்த தொடர்மழையினால் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் கண்மாய்க்கு மத்தியில் உள்ள மியாவாக்கி அடர்வனக் காடுகள் பசுமை நிறத்தில் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மழைநீர் கால்வாய்களை தூர்வாரியதால் குளம் நிரம்பி உள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள், கண்மாயின் டிரோன் காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்