பாதுகாப்புடன் பிள்ளையார் சிலைகள் ஊர்வலம்..திடீரென்று தடுத்து நிறுத்திய போலீஸ்..முற்றிய வாக்குவாதம்

x

திண்டுக்கல்லில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலத்தின் போது தாரை தப்பட்டை இசைக்க காவல்துறையினர் தடை விதித்த‌தால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடை பாறைப்பட்டியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது, மதுரை சாலையில் பள்ளிவாசல் வந்தவுடன் தாரை தப்பட்டை அடிப்பதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட பொதுமக்கள், போலீசார் ஏற்பாடு செய்திருந்த பஜனை பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், அமைதியாக ஊர்வலத்தை நடத்தி கோட்டை கேணியில் சிலைகளை கரைக்க வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்