2026க்கு ஜெயலலிதாவின் தொகுதியை டார்கெட் செய்த விஜய்? - மாநாடு பணியில் நடந்த அதிர்ச்சி

x

வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில், மதுரை வடக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால், அவருடைய கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் முதலாவது மாநாட்டை வரும் 27-ஆம் தேதி, விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம், முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், தூத்துக்குடி, சென்னை ஆர்.கே. நகர் இவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிட இருப்பதாக, அந்த பகுதியில் உள்ள கட்சியினர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் உற்சாகம் அடைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர், மதுரை வடக்கு தொகுதியில் தற்போதைய திமுக எம்எல்ஏ தளபதியை எதிர்த்து, இளைய தளபதி போட்டியிடுகிறார் என சிலாகித்து வருகின்றனர்.

-


Next Story

மேலும் செய்திகள்