இன்று முதல்... வெளியான முக்கிய அறிவிப்பு | TRB

x

இடைநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் 2800 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், ஆரம்ப பள்ளிகளில் பணிபுரிவதற்காக, 1768 இடைநிலை ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மார்ச் 15-ம் தேதி வரை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், போட்டித் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்